கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தை வீடாக மாற்றிய திமுக நிர்வாகி மீது அதிரடி விசாரணை

கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தை வீடாக மாற்றிய திமுக நிர்வாகி மீது அதிரடி விசாரணை

கோவை மாநகராட்சி வடவள்ளி பகுதியில் உள்ள அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை திமுக நிர்வாகி ஷ்யாம் சுந்தர் தனது சொந்த வீடாக மாற்றி குடும்பத்துடன் வசித்து வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் கடும் கண்டனங்களை எழுப்பியுள்ள நிலையில், சுகாதாரத்துறை தற்போது தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் சோமசுந்தரம் உத்தரவின் பேரில், மாவட்ட சுகாதார அலுவலர் பாலுசாமி தலைமையில் இதற்காக தனி விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அரசு கட்டிடத்தில் தங்குவதற்கு அனுமதி அளித்தது யார் மற்றும் இதில் அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *