கோச் கவுதம் கம்பீருக்கு எதிரான ரசிகர்கள் போராட்டம்! தொடர் தோல்வியால் வெடித்த கோபம்

கோச் கவுதம் கம்பீருக்கு எதிரான ரசிகர்கள் போராட்டம்! தொடர் தோல்வியால் வெடித்த கோபம்

சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 0-2 என்ற கணக்கில் தோல்வியடைந்ததால், தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் மீது ரசிகர்கள் கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக, குவாஹாட்டியில் 408 ரன்கள் வித்தியாசத்தில் ஏற்பட்ட படுதோல்விக்குப் பிறகு இந்த அதிருப்தி அதிகரித்துள்ளது. ஆட்டம் முடிந்த பின்னர் மைதானத்தை விட்டு வெளியேறிய ரசிகர்கள் சிலர், “கவுதம் கம்பீர் ஒழிக” என்று கோஷமிட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த மோசமான தோல்விக்கு நேரடியாக பயிற்சியாளரே பொறுப்பு என ரசிகர்கள் கருதுகின்றனர்.

முதல் இன்னிங்ஸில் 201 மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 140 ரன்களுக்குள் அணி சுருண்டது, அணியின் தயாரிப்பு மற்றும் உத்தி குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. கம்பீரின் பயிற்சியின் கீழ் கடந்த 18 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 10-ல் தோல்வியைச் சந்தித்துள்ளதால், அவரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. தோல்விக்கான பொறுப்பை ஏற்ற கம்பீர், தனது எதிர்காலம் குறித்து பிசிசிஐ முடிவெடுக்கும் என்று தெரிவித்துள்ளார். இந்த மோசமான செயல்பாட்டிற்கு பிசிசிஐ என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *