கொள்ளைக்காரன் டூ சாமியார் எலுமிச்சை பாபாவின் பல கோடி மோசடி திரைமறைவு கதைகள்
December 18, 2025

புலந்த்சாரைச் சேர்ந்த கார் திருட்டு கும்பல் தலைவன் யூசுப் இப்போது ‘எலுமிச்சை பாபா’வாக உருவெடுத்துள்ளார். வசியம் மற்றும் மாந்திரீகம் செய்வதாகக் கூறி மக்களிடம் ரூ. 1100 வசூலித்து பெரும் மோசடியில் ஈடுபட்டு வருகிறார். காவல்துறைக்குத் தெரியாமல் இந்த மூடநம்பிக்கை வலை மூலம் அவர் பல கோடி ரூபாய் சொத்துக்களைச் சேர்த்துள்ளார்.
டெல்லி-என்சிஆர் பகுதிகளில் ஆடம்பர பங்களாக்களைக் கொண்டுள்ள இந்த ரௌடி, வாரந்தோறும் வெவ்வேறு நகரங்களில் தர்பார் நடத்தி மக்களை ஏமாற்றி வருகிறார். குற்றப் பின்னணி கொண்ட இவர் மீது பல வழக்குகள் இருந்தபோதிலும், ஆன்மீகப் போர்வையில் தொடரும் இந்த மோசடி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.