கொடூரத்தின் வடுக்களை துடைத்து பாதிக்கப்பட்ட மாணவியை கரம் பிடிக்க முன்வந்த காதலன்
March 9, 2026

கோவையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவியை திருமணம் செய்து கொள்ள அவரது காதலன் சம்மதம் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நடந்த இந்த அதிர்ச்சி சம்பவத்தில் தொடர்புடைய மூன்று குற்றவாளிகளுக்கும் நீதிமன்றம் அண்மையில் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்தது. இந்த இக்கட்டான சூழலில் மாணவிக்கு மனரீதியாக ஆதரவாக இருந்த காதலன், தற்போது அவரை மணக்க முடிவு செய்துள்ளார்.
அரசு வழக்கறிஞர் ஜிஷா இது குறித்து கூறுகையில், அந்த கொடூர சம்பவத்தை ஒரு கெட்ட கனவாக மறந்துவிட்டு மாணவியுடன் இணைந்து வாழ அவரது காதலன் உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார். மருத்துவ ஆலோசனைகள் மற்றும் காதலனின் தொடர் ஒத்துழைப்பால் அந்த மாணவி தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார். இந்த மனிதாபிமான செயல் சமூகத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.