கேரளாவில் ஒரே சாலையைத் தனித்தனியே திறந்து வைத்த மோடியும் மாநில அமைச்சரும் மோதல் போக்கு தீவிரம்

கேரளாவில் ஒரே சாலையைத் தனித்தனியே திறந்து வைத்த மோடியும் மாநில அமைச்சரும் மோதல் போக்கு தீவிரம்

கேரள சட்டசபைத் தேர்தல் நெருங்கும் வேளையில் தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தைத் திறப்பதில் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே கடும் மோதல் வெடித்துள்ளது. பிரதமர் மோடி பங்கேற்ற விழாவிற்கு மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் முகமது ரியாஸ் அழைக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்குப் பதிலடியாக இடதுசாரி முன்னணி சார்பில் தனியாக ஒரு திறப்பு விழா நடத்தப்பட்டு அமைச்சர் ரியாஸ் சாலையைத் திறந்து வைத்தார்.

இத்திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்த ₹5,500 கோடிக்கும் மேல் மாநில அரசு செலவிட்டுள்ளதாக கேரளா வாதிடுகிறது. ஆனால் இது மத்திய அரசின் திட்டம் என்பதால் நிதி விதிகள் முறையாகப் பின்பற்றப்பட வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்துகிறது. தேர்தலுக்கு முன் திட்டத்தின் பெருமையைப் பெற இரு தரப்பும் போட்டி போடுவது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *