கேரளாவின் பெயரை கேரளம் என மாற்ற மத்திய அமைச்சரவை பரிசீலனை
February 24, 2026

கேரள மாநிலத்தின் பெயரை அதிகாரப்பூர்வமாக ‘கேரளம்’ என மாற்றக் கோரும் தீர்மானம் தற்போது மத்திய அமைச்சரவையின் பரிசீலனையில் உள்ளது. மலையாள மொழி மற்றும் கலாச்சார அடையாளத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த மாற்றத்தை கொண்டு வர முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதற்காக அரசியலமைப்பின் முதல் அட்டவணையில் திருத்தம் செய்ய மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த விவகாரத்தில் ஆளும் இடதுசாரி முன்னணி மற்றும் பாஜக ஆகிய இரு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தவுடன், மாநிலத்தின் பெயர் அனைத்து மொழிகளிலும் கேரளம் என அதிகாரப்பூர்வமாக மாற்றப்படும்.