கேபிள் டிவிக்கு டாட்டா! ₹999 Jio ஹோம் பிளான்; 1000 சேனல்கள், 11 OTT சந்தா

ரிலையன்ஸ் ஜியோ ஃபைபரின் (Reliance Jio Fiber) பிரபலமான ஹோம் பிளான், கேபிள் டிவி மற்றும் டிடிஹெச் சேவைகளுக்கு கடுமையான சவாலை அளிக்கிறது. ₹999 (ஜிஎஸ்டி கூடுதல்) மாதாந்திர விலையுள்ள இந்த பேக்கேஜில், வாடிக்கையாளர்களுக்கு 150 Mbps வேகத்தில் அதிகபட்சமாக 1000 GB டேட்டா வழங்கப்படுகிறது. டேட்டாவுடன், இந்த பிளானில் 1000 லைவ் டிவி சேனல்கள் மற்றும் 11 முக்கிய OTT தளங்களுக்கான சந்தா கிடைக்கிறது.
இந்த ₹999 பிளானில் அமேசான் பிரைம் லைட், ஜியோ ஹாட்ஸ்டார், சோனி லிவ், ZEE5, மற்றும் Hoichoi போன்ற முன்னணி OTT தளங்களுக்கான அணுகல் உள்ளது. புதிய வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு இந்த பிளானை எடுக்க வேண்டும், மேலும் அவர்களுக்கு வைஃபை ரூட்டர், ஆண்ட்ராய்டு பாக்ஸ் மற்றும் ரிமோட் ஆகியவை இலவசமாக வழங்கப்படும். மேலும், ஜியோ ₹599 என்ற மலிவான பிளானையும் வழங்குகிறது; இதில் 30 Mbps வேகத்தில் டேட்டா மற்றும் அதே எண்ணிக்கையிலான சேனல்கள் மற்றும் OTT சந்தாக்கள் (பிரைம் லைட் தவிர) அடங்கும்.