கேபிசி கோடீஸ்வரர் முதல் ஐபிஎஸ் அதிகாரி வரை ரவிமோகன் சைனியின் வியக்க வைக்கும் பயணம்
March 16, 2026

2001 ஆம் ஆண்டு கோன் பனேகா குரோர்பதி ஜூனியர் நிகழ்ச்சியில் 14 வயதில் ஒரு கோடி ரூபாய் வென்று சாதனை படைத்தார் ரவிமோகன் சைனி. ராஜஸ்தானைச் சேர்ந்த இந்த சிறுவன் தனது அபார அறிவாற்றலால் தேசத்தின் கவனத்தை ஈர்த்தார். பள்ளிப் படிப்பிற்குப் பிறகு மருத்துவக் கல்வியை முடித்து மருத்துவர் பட்டம் பெற்றாலும், நாட்டின் நிர்வாக சேவையில் சேர வேண்டும் என்பதே அவரது லட்சியமாக இருந்தது.
தமது விடாமுயற்சியால் 2014 ஆம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று ஐபிஎஸ் அதிகாரியாக பொறுப்பேற்றார் ரவிமோகன் சைனி. தற்போது குஜராத் மாநிலம் போர்பந்தர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் இவரது வாழ்க்கை பயணம் உழைப்பிற்கு மிகச்சிறந்த உதாரணமாகும். ஒரு கோடி ரூபாய் பரிசு வென்றது முதல் ஐபிஎஸ் அதிகாரி வரையிலான இவரது மாற்றத்தை கண்டு இளைஞர்கள் உத்வேகம் அடைந்து வருகின்றனர்.