குடும்ப அரசியலா அல்லது மக்கள் சக்தியா தமிழகத்தின் அடுத்த ஆட்சியை தீர்மானிக்கப்போவது யார்

குடும்ப அரசியலா அல்லது மக்கள் சக்தியா தமிழகத்தின் அடுத்த ஆட்சியை தீர்மானிக்கப்போவது யார்

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், திருச்சியில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அனல் பறக்கும் உரையை நிகழ்த்தினார். இந்தத் தேர்தல் ஒரு குடும்பத்தின் ஆட்சிக்கும் தமிழக மக்களுக்கும் இடையிலான போர் என்று அவர் வர்ணித்தார். முதல்வர் ஸ்டாலினின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்த அவர், வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக இது அமையும் என்று உறுதிபடத் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி ரூ.5,655 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்ததைச் சுட்டிக்காட்டிய நாகேந்திரன், பிரதமரைத் தமிழ்நாட்டின் ‘தாய்மாமன்’ எனப் புகழ்ந்தார். கடந்த கால ஆட்சிகளை விட மோடி ஆட்சியில் தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். எம்.ஜி.ஆரின் பாடல் வரிகளை மேற்கோள் காட்டிப் பேசிய அவர், சுயநல அரசியலை வீழ்த்தி மக்கள் நலன் காக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி மலர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *