காஸ் சிலிண்டர் விலை உயர்வால் ஹோட்டல் மெனுவில் இனி தோசையும் ஆம்லெட்டும் இருக்காது
March 10, 2026

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் இந்தியாவில் சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் எதிரொலியாக கோயம்புத்தூரில் உள்ள பல ஹோட்டல்கள் அதிக எரிவாயு தேவைப்படும் தோசை, ஆம்லெட் மற்றும் தந்தூரி போன்ற உணவுகளை தயாரிப்பதை நிறுத்தியுள்ளன. எரிபொருள் தட்டுப்பாட்டால் உணவகங்கள் பெரும் நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சிலிண்டர் தட்டுப்பாட்டால் சுமார் 5000 ஹோட்டல்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் 35,000 தொழிலாளர்கள் வேலை இழக்கும் சூழல் உருவாகியுள்ளதாக ஹோட்டல் சங்கத்தினர் கவலை தெரிவித்துள்ளனர். அரசு உடனடியாக தலையிட்டு மாற்று ஏற்பாடுகளை செய்யாவிட்டால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் வணிகம் கடுமையாகப் பாதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.