காஷ்மீரில் 20 முறை தப்பிய சைபுல்லா உட்பட 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
February 24, 2026

ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி வேட்டையில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதில் பலமுறை பிடிபடாமல் தப்பிய முக்கிய தீவிரவாதி சைபுல்லாவும் அடங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மோதலின் போது கே 9 பிரிவைச் சேர்ந்த டைசன் என்ற ராணுவ நாய் காயமடைந்தது. சம்பவ இடத்திலிருந்து இரண்டு ஏகே 47 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.