காலையில் கண் மற்றும் முகம் வீக்கமாக இருக்கிறதா இது சிறுநீரக பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம்

காலையில் கண் மற்றும் முகம் வீக்கமாக இருக்கிறதா இது சிறுநீரக பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம்

காலையில் எழுந்தவுடன் கண்களைச் சுற்றியுள்ள வீக்கத்தை வெறும் சோர்வு என்று அலட்சியப்படுத்த வேண்டாம். சிறுநீரகத்தின் வடிகட்டும் திறன் குறையும் போது, புரதம் சிறுநீர் வழியாக வெளியேறுவதால் உடலில் நீர் தேங்கி இத்தகைய வீக்கம் ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

குறிப்பாக நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த ஆரம்பக்கட்ட எச்சரிக்கையை கவனிக்க வேண்டும். தூக்கத்தில் உடல் சமமாக இருப்பதால் முகம் மற்றும் கண்களில் தேங்கும் இந்த நீர், பகல் நேரத்தில் கால்களுக்கு நகர்கிறது. சிறுநீரில் நுரை வருதல் அல்லது அதீத சோர்வு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியமாகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *