காபி குடித்துக் கொண்டே தனது இறப்பு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பிரதமர் நெதன்யாகு

காபி குடித்துக் கொண்டே தனது இறப்பு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பிரதமர் நெதன்யாகு

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கொல்லப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவிய வதந்திகளுக்கு அவரே அதிரடியாக பதிலடி கொடுத்துள்ளார். ஜெருசலேமில் உள்ள ஒரு காபி ஷாப்பில் அமர்ந்து காபி அருந்தும் வீடியோவை வெளியிட்டு, தான் உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். “நான் காபிக்காக ஏங்குகிறேன்” என்று சிலேடையாகக் கூறி தனது எதிரிகளுக்கு அவர் பதிலளித்தார்.

முந்தைய வீடியோக்கள் ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டவை என்ற குற்றச்சாட்டை மறுக்க, தனது விரல்களை எண்ணிக் காட்டி அவர் கேலி செய்தார். ஈரான் மற்றும் லெபனானில் மொசாத் அமைப்பினர் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *