காதலி நாடகம் ஆடிய 4 பெண்கள்! மூதாட்டியிடம் ரூ. 9 கோடி மோசடி! நாட்டையே உலுக்கிய சம்பவம்

நாட்டிலேயே மிகப்பெரிய டிஜிட்டல் மோசடியாகக் கருதப்படும் சம்பவத்தில், 80 வயதான முதியவர் ஒருவரிடம் 4 பெண்கள் ரூ. 9 கோடி வரை மோசடி செய்துள்ளனர். ஏப்ரல் 2023-இல், ஷார்வி என்ற பெண்ணுடன் பேஸ்புக்கில் ஏற்பட்ட நட்பு, வாட்ஸ்அப் வழியாகத் தொடர்ந்தது. கணவரைப் பிரிந்து வாழ்வதாகவும், குழந்தைகளின் சிகிச்சைக்காகப் பணம் தேவைப்படுவதாகவும் கூறி அப்பெண் தொடர்ந்து பணம் கேட்டுள்ளார். இவ்வாறு அப்பெண் முதியவரிடம் பல லட்சம் ரூபாயைப் பெற்றுள்ளார்.
மோசடிச் சங்கிலியில் ஷார்வி, கவிதா, தினாஜ் மற்றும் ஜாஸ்மின் என நான்கு பெண்கள் ஈடுபட்டுள்ளனர். நண்பர்கள் அல்லது சகோதரிகள் என்று கூறி, அவர்கள் பல்வேறு கட்டங்களில் முதியவரை மிரட்டிப் பணம் பறித்துள்ளனர். ஏப்ரல் 2023 முதல் ஜனவரி 2025 வரை, மொத்தம் 734 பரிவர்த்தனைகள் மூலம் சுமார் ரூ. 8.7 கோடி இழந்துள்ளார். மகனிடம் ரூ. 5 லட்சம் கேட்டபோதுதான் முழு மோசடியும் அம்பலமானது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு முதியவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.