காதலனுக்காக கணவர் குழந்தையை பிரிந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூர முடிவு

உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூரில் உமா என்ற பெண் தனது காதலனாலேயே தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டாக்ஸி ஓட்டுநரான பிலால் என்பவருடன் லிவ்-இன் உறவில் இருந்த உமா, கடந்த சில நாட்களாக காணாமல் போன நிலையில், போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. வேறொரு பெண்ணைத் திருமணம் செய்யத் திட்டமிட்ட பிலால், அதற்கு இடையூறாக இருந்த உமாவை ஹரியானா எல்லைக்கு அழைத்துச் சென்று கழுத்தை அறுத்துக் கொலை செய்து, தலையைத் துண்டித்து காட்டில் வீசியுள்ளார்.
சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு தனது முதல் கணவருக்காக வீட்டை விட்டு வெளியேறிய உமாவுக்கு 13 வயதில் ஒரு மகன் உள்ளான். ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிலாலுடன் ஏற்பட்ட பழக்கத்தால் கணவர் மற்றும் குழந்தையை விட்டுவிட்டு அவனுடன் வாழத் தொடங்கினார். தற்போது கொலையாளியான பிலால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவன் அடையாளம் காட்டிய இடத்தில் இருந்து உமாவின் தலை மீட்கப்பட்டுள்ளது. கள்ளக்காதல் விவகாரத்தில் ஒரு பெண் இவ்வாறு கொடூரமாக கொல்லப்பட்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.