கள்ளக்காதலனுடன் சேர கணவனை தலையணையால் அமுக்கி கொன்ற மனைவி திருமண கோலத்தில் சிக்கினார்

கள்ளக்காதலனுடன் சேர கணவனை தலையணையால் அமுக்கி கொன்ற மனைவி திருமண கோலத்தில் சிக்கினார்

கர்நாடக மாநிலம் துமகுருவில் கணவனை திட்டமிட்டு கொலை செய்த மனைவியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கடந்த ஜனவரி 30 ஆம் தேதி பரமேஷ் என்பவர் மாரடைப்பால் இறந்ததாகக் கூறி அவரது மனைவி ஆஷா நாடகமாடியுள்ளார். ஆனால் கணவர் இறந்த 20 நாட்களில் தனது கள்ளக்காதலன் சந்திரப்பாவுடன் ஆஷா திருமணம் செய்து கொண்டதால் உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

உயிரிழந்தவரின் சகோதரி அளித்த புகாரின் பேரில் போலீசார் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தபோது அவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தது உறுதியானது. தீவிர விசாரணையில் ஆஷாவும் சந்திரப்பாவும் சேர்ந்து பரமேஷை தலையணையால் அமுக்கி கொன்றதை ஒப்புக்கொண்டனர். மாரடைப்பு என பொய் கூறி நாடகமாடிய கள்ளக்காதல் ஜோடியை போலீசார் தற்போது சிறையில் அடைத்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *