கர்ப்ப காலத்தில் இரத்த சர்க்கரை அதிகரிப்பு குழந்தையின் மூளை வளர்ச்சியை பாதிக்குமா நிபுணர்கள் எச்சரிக்கை

கர்ப்ப காலத்தில் தாய்க்கு ஏற்படும் நீரிழிவு நோய் அவரது ஆரோக்கியத்தை மட்டுமல்லாமல் கருவில் உள்ள குழந்தையின் மூளை வளர்ச்சியையும் சிதைக்கக்கூடும். தாய்க்கு இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், பிறக்கப்போகும் குழந்தைக்கு எதிர்காலத்தில் வலிப்பு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு சுமார் 30 முதல் 40 சதவீதம் வரை அதிகரிக்கிறது. குறிப்பாக கர்ப்பத்தின் முதல் எட்டு வாரங்களில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லை என்றால், அது குழந்தையின் நரம்பு மண்டல அமைப்பில் நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
தாயின் உடலில் உள்ள அதிகப்படியான குளுக்கோஸ் நஞ்சுக்கொடி வழியாக குழந்தையை சென்றடைந்து மூளையில் அழற்சியை உருவாக்குவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். எனினும் முறையான உணவுக்கட்டுப்பாடு, தொடர்ச்சியான பரிசோதனைகள் மற்றும் மருத்துவரின் ஆலோசனையின்படி இன்சுலின் சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் இந்த அபாயத்தை தவிர்க்க முடியும். குழந்தையின் பிறப்பிற்கு பிறகு இரத்த சர்க்கரை குறைபாட்டைத் தடுக்கவும் கர்ப்ப காலத்தில் முறையான ஸ்கேன் பரிசோதனைகளை செய்யவும் நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.