கரூர் விவகாரத்தில் சிபிஐ அதிரடி செந்தில் பாலாஜி மற்றும் முக்கிய புள்ளிகளுக்கு வலைவீச்சு

கரூர் சம்பவம் தொடர்பாக டெல்லியில் நடிகர் விஜய் ஆஜரானதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. வரும் 17-ஆம் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய விஐபிக்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கும் சம்மன் அனுப்ப சிபிஐ திட்டமிட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் டெல்லியில் இருந்து வரும் இந்த அடுத்தடுத்த நெருக்கடிகள் திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை தொகுதியில் போட்டியிடுமாறு முதல்வர் ஸ்டாலின் விடுத்த கோரிக்கையால் செந்தில் பாலாஜி அதிர்ச்சியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. அதிமுகவின் பலமான கோட்டையாகக் கருதப்படும் கோவையில் செந்தில் பாலாஜியை களமிறக்க ஸ்டாலின் திட்டமிட்டுள்ள நிலையில், சிபிஐ விசாரணையும் சேர்ந்து அவரை நிலைகுலையச் செய்துள்ளது. இந்த அரசியல் நகர்வுகளும் சிபிஐயின் கிடுக்கிப்பிடி விசாரணையும் தமிழக தேர்தல் களத்தில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.