கம்பீரின் சிரிப்பை பாராட்டிய தோனி இணையத்தில் வைரலாகும் நெகிழ்ச்சி பதிவு

அகமதாபாத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி 2026 டி20 உலகக்கோப்பையை வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது. இந்த வரலாற்று வெற்றியைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் நீண்ட நாட்களாக அமைதியாக இருந்த எம்எஸ் தோனி, பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் பும்ராவை பாராட்டி பதிவிட்டுள்ளார். “கோச் சார், உங்கள் முகத்தில் இருக்கும் இந்த சிரிப்பு மிக அழகாக இருக்கிறது” என கம்பீரின் மகிழ்ச்சியை தோனி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
இறுதிப்போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய பும்ராவை ‘சாம்பியன்’ என தோனி புகழ்ந்துள்ளார். சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மாவின் அதிரடியால் 255 ரன்கள் குவித்த இந்தியா, 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் கபில் தேவ், தோனி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரின் வரிசையில் உலகக்கோப்பையை வென்ற இந்திய கேப்டனாக சூர்யகுமார் யாதவ் இணைந்துள்ளார்.