கந்தர்வகோட்டை அருகே முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம் பெட்ரோல் பங்க் ஊழியருக்கு அரிவாள் வெட்டு
March 13, 2026

கந்தர்வகோட்டை ஒன்றியம் வேம்பன்பட்டியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் நள்ளிரவில் பயங்கர கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று முகமூடி கொள்ளையர்கள், அங்கிருந்த ஊழியர் பாண்டியனை அரிவாளால் வெட்டிவிட்டு அவரிடமிருந்த 25 ஆயிரம் ரூபாய் பணப்பையை பறித்துக்கொண்டு தப்பினர்.
காயமடைந்த பாண்டியன் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் தப்பி ஓடிய கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.