ஓய்வு குறித்து மௌனம் கலைத்த ரோஹித் சர்மா வானில் பறக்கும் விமானம் இப்போது தரை இறங்காது

ஓய்வு குறித்து மௌனம் கலைத்த ரோஹித் சர்மா வானில் பறக்கும் விமானம் இப்போது தரை இறங்காது

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற பிறகு, தனது எதிர்காலம் குறித்த முக்கிய தகவலை ரோஹித் சர்மா பகிர்ந்துள்ளார். விஜய் ஹசாரே கோப்பையில் விளையாடுவதற்கு முன்னதாக நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், தனது கிரிக்கெட் பயணம் தற்போது ஒரு விமானத்தைப் போல உயரத்தில் பறந்து கொண்டிருப்பதாகவும், இப்போதைக்கு தரை இறங்கும் எண்ணம் தமக்கு இல்லை என்றும் தெரிவித்தார். இதன் மூலம் தனது ஒருநாள் போட்டி ஓய்வு குறித்த வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

நியூசிலாந்து தொடருக்கு முன்னதாக பயிற்சி பெறுவதற்காக ரோஹித் மற்றும் விராட் கோலியை உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடுமாறு பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது. மும்பை அணிக்காக களம் இறங்கும் ரோஹித், 2027 உலகக்கோப்பையை இலக்காகக் கொண்டு செயல்படுவதை அவரது வார்த்தைகள் உணர்த்துகின்றன. தற்போதைய ஃபார்மை தக்கவைத்துக் கொண்டு இந்திய அணியை வழிநடத்த அவர் முழு முனைப்புடன் இருக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *