ஒரே கூரையின் கீழ் இரண்டு மனைவிகள், இந்திய கிராமத்தின் விசித்திரமான கலாச்சாரம் வியக்க வைக்கிறது

ஒரே கூரையின் கீழ் இரண்டு மனைவிகள், இந்திய கிராமத்தின் விசித்திரமான கலாச்சாரம் வியக்க வைக்கிறது

செய்தி பிரிவு : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மீரில் உள்ள ராம்தேயோ கிராமத்தில் வசிக்கும் ஆண்கள் அனைவரும் இரண்டு திருமணங்கள் செய்து கொள்கின்றனர். முதல் மனைவிக்குக் குழந்தை பிறக்காது அல்லது பெண் குழந்தை மட்டுமே பிறக்கும் என்ற நம்பிக்கையே இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. இந்த விசித்திரமான வழக்கம் அந்த ஊர் மக்களின் குடும்ப அமைப்பில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது.

சாதாரண மக்களின் வாழ்வில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அங்குள்ள இரண்டு மனைவிகளும் சக்களத்திகளாகப் பார்க்காமல், உடன் பிறந்த சகோதரிகளைப் போலவே ஒற்றுமையாக வாழ்கின்றனர். சட்டப்படி இது தவறு என்றாலும், கிராமத்தில் யாருமே புகார் அளிக்காததால் இந்தப் பழக்கம் இன்றும் தொடர்கிறது. நவீன கால இளைஞர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தாலும், இந்த ஊரின் விசித்திர கலாச்சாரம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *