ஒடிசாவில் பயங்கரம் கிணற்றில் குழந்தைகளை வீசிக் கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்த சோகம்
March 16, 2026

ஒடிசா மாநிலம் சம்பல்பூர் மாவட்டத்தில் உள்ள சர்கிடிஹி கிராமத்தில் சஞ்சு மத்கி என்ற பெண் தனது இரண்டு பெண் குழந்தைகளை கிணற்றில் வீசிக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். கடந்த வெள்ளிக்கிழமை முதல் தலைமறைவாக இருந்த அந்தப் பெண்ணின் உடல், அருகில் உள்ள கிராமத்தில் உள்ள கால்வாய் அருகே தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
குழந்தைகளின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் தேடி வந்த நிலையில் இந்த சடலம் மீட்கப்பட்டது. குழந்தைகளைக் கொன்ற குற்ற உணர்வு அல்லது கைது செய்யப்படுவோம் என்ற பயத்தில் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இந்த துயரமான சம்பவத்தின் பின்னணியில் உள்ள குடும்பப் பிரச்சனைகள் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.