ஐரோப்பா செல்லப்போவதில்லை சவுதி அரேபியாவே எனது இல்லம் என்கிறார் ரொனால்டோ
February 23, 2026

அல் நாசர் கிளப்பை விட்டு கிறிஸ்டியானோ ரொனால்டோ வெளியேறப்போவதாக வெளியான வதந்திகளுக்கு அவரே முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அல் ஹஸம் அணிக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு பேசிய அவர், சவுதி அரேபியாவில் தானும் தனது குடும்பமும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், கிளப்பை சாம்பியனாக்குவதே தனது இலக்கு என்றும் கூறினார்.
ஐரோப்பா அல்லது அமெரிக்க லீக்குகளுக்குத் திரும்பும் எண்ணம் தமக்கு இல்லை என்பதை ரொனால்டோ உறுதிப்படுத்தியுள்ளார். 2027 வரை ஒப்பந்தம் உள்ள நிலையில், சவுதி புரோ லீக் கோப்பையை வெல்வதில் தீவிரமாக உள்ளார். தற்போது புள்ளிப்பட்டியலில் ரொனால்டோவின் அல் நாசர் அணி முதலிடத்தில் நீடிக்கிறது.