ஐபிஎல் டிக்கெட் கிடைக்காமல் தவிக்கும் எம்எல்ஏக்கள் கர்நாடக சட்டப்பேரவையில் சபாநாயகர் அதிரடி உத்தரவு
March 27, 2026

பெங்களூருவில் ஐபிஎல் தொடர் தொடங்க உள்ள நிலையில் டிக்கெட் விவகாரம் கர்நாடக சட்டப்பேரவையில் புயலைக் கிளப்பியுள்ளது. அரசு வழங்கிய குறைந்த விலை நிலத்தில் கிரிக்கெட் சங்கம் வருவாய் ஈட்டினாலும், எம்எல்ஏக்களே டிக்கெட்டுக்காக காத்திருக்க வேண்டியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோகா குற்றம் சாட்டினார். டிக்கெட் கருப்பு சந்தையில் விற்கப்படுவதாகவும் உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் தலா நான்கு டிக்கெட்டுகள் கிடைப்பதை உறுதி செய்யுமாறு துணை முதல்வர் டி.கே.சிவக்குமாருக்கு சபாநாயகர் யு.டி.காதர் உத்தரவிட்டார். இந்த கோரிக்கையை ஏற்ற அரசு நிர்வாகம் கிரிக்கெட் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டது. நடப்பு சீசனில் பெங்களூருவில் ஐந்து லீக் போட்டிகள் மட்டுமே நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.