ஐபிஎல் 2026 முழு அட்டவணை குறித்த முக்கிய அறிவிப்பு தேர்தல் முடிவடைந்ததும் விரிவான தகவல்கள் வெளியாகும்

ஐபிஎல் 2026 முழு அட்டவணை குறித்த முக்கிய அறிவிப்பு தேர்தல் முடிவடைந்ததும் விரிவான தகவல்கள் வெளியாகும்

பிசிசிஐ இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் முதற்கட்ட அட்டவணையை வெளியிட்டுள்ளது இதில் மார்ச் 28 முதல் ஏப்ரல் 12 வரை 20 போட்டிகள் நடைபெறவுள்ளன. சட்டசபை தேர்தல் காரணமாக இரண்டாம் கட்ட முழு அட்டவணைக்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் தற்போது ஐந்து மாநில தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்த எதிர்பார்ப்பு முடிவுக்கு வரவுள்ளது. மீதமுள்ள போட்டிகளுக்கான அதிகாரப்பூர்வ அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பின்னரே பாதுகாப்பு மற்றும் காவல்துறை பணியமர்த்தலை கருத்தில் கொண்டு மீதமுள்ள அட்டவணை இறுதி செய்யப்படும் என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். இந்த சீசன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியுடன் தொடங்குகிறது. முதற்கட்டத்தில் 10 மைதானங்களில் போட்டிகள் நடத்தப்படவுள்ள நிலையில் தேர்தல் சூழலுக்கு ஏற்ப எவ்வித இடையூறுமின்றி தொடரை நடத்த நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *