ஐபிஎல் 2026 தொடரிலிருந்து தோனி திடீர் விலகல் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி

ஐபிஎல் 2026 தொடர் தொடங்குவதற்கு முன்பே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தசைப்பிடிப்பு காயம் காரணமாக தோனி முதல் இரண்டு வார போட்டிகளில் விளையாட மாட்டார் என்று சிஎஸ்கே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தற்போது அவர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் மற்றும் மறுவாழ்வு சிகிச்சையில் உள்ளார். எப்போதும் உடற்தகுதியுடன் இருக்கும் தோனி, தொடரின் தொடக்கத்திலேயே விலகியுள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மார்ச் 30 அன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் தோனி இல்லாதது சிஎஸ்கே அணிக்கு பெரும் இழப்பாக அமையும். காயத்தின் தீவிரம் அதிகரித்தால் அவர் கூடுதல் போட்டிகளை தவறவிட நேரிடும் என நிபுணர்கள் கருதுகின்றனர். இதனால் 2026 ஐபிஎல் தொடரே தோனியின் கடைசி தொடராக இருக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சிஎஸ்கே ரசிகர்கள் தற்போது தல தோனியின் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.