ஐசிசி ஒருநாள் போட்டி தரவரிசையில் முதலிடத்தை தக்கவைத்து ஸ்மிருதி மந்தனா சாதனை
March 11, 2026

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள பெண்களுக்கான ஒருநாள் போட்டி பேட்டர்கள் தரவரிசையில் இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 790 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 652 புள்ளிகளுடன் 8-வது இடத்தை பிடித்துள்ளார்.
அதே சமயம் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஒரு இடம் சரிந்து 12-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். நியூசிலாந்தின் புரூக் ஹலிடே ஜிம்பாப்வேக்கு எதிரான அதிரடி ஆட்டத்தால் எட்டு இடங்கள் முன்னேறி 11-வது இடத்தைப் பிடித்துள்ளார். மற்றொரு நியூசிலாந்து வீராங்கனை மேடி கிரீன் நான்கு இடங்கள் உயர்ந்து 23-வது இடத்தை அடைந்துள்ளார்.