ஏசி இல்லாமலேயே வீட்டை ஜில்லென்று மாற்றும் இந்த 5 அற்புத செடிகள்

ஏசி இல்லாமலேயே வீட்டை ஜில்லென்று மாற்றும் இந்த 5 அற்புத செடிகள்

கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்க ஏசி அல்லது கூலருக்கு மாற்றாக இன்டோர் பிளான்ட்டுகள் சிறந்த தீர்வாகும். கற்றாழை, ஸ்நேக் பிளான்ட், அரிகா பாம், மணி பிளான்ட் மற்றும் பீஸ் லில்லி போன்றவை வீட்டிலுள்ள வெப்பத்தையும் நச்சுக்களையும் உறிஞ்சுகின்றன. இவை வீட்டின் அழகை அதிகரிப்பதோடு இயற்கையான முறையில் வெப்பநிலையைக் குறைத்து ஒட்டுமொத்த சூழலையும் குளிர்ச்சியாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க உதவுகின்றன.

கற்றாழை மற்றும் ஸ்நேக் பிளான்ட் இரவிலும் ஆக்ஸிஜனை வெளியிட்டு காற்றைத் தூய்மைப்படுத்துவதால் ஆழ்ந்த உறக்கத்திற்கு வழிவகுக்கின்றன. அரிகா பாம் காற்றில் ஈரப்பதத்தை நிலைநிறுத்தி இயற்கையான குளிர்விப்பானாகச் செயல்படுகிறது. மிகக் குறைந்த பராமரிப்பு தேவைப்படும் இந்தச் செடிகள் மாசுக்களை நீக்கி ஆரோக்கியமான சூழலை உருவாக்குகின்றன. மின்சாரச் செலவைக் குறைத்து இயற்கையான முறையில் வீட்டைப் பராமரிக்க இந்தச் செடிகளை உடனே வளர்க்கத் தொடங்குங்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *