எரிபொருள் தட்டுப்பாடு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு மத்திய அரசு கடும் உத்தரவு

எரிபொருள் தட்டுப்பாடு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு மத்திய அரசு கடும் உத்தரவு

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் தேவையில்லை என மத்திய பெட்ரோலிய அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதாக அரசு உறுதி அளித்துள்ளது. இருப்பினும், பொதுமக்கள் பாதுகாப்பற்ற முறையில் பாட்டில்களில் பெட்ரோல் மற்றும் டீசலை சேமித்து வைப்பது பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்பதால், அத்தகைய செயல்களில் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

விதிமுறைகளை மீறி பாதுகாப்பற்ற முறையில் எரிபொருள் விற்பனை செய்யும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பொதுமக்கள் தேவையற்ற பீதி அடையாமல் எரிவாயு மற்றும் எரிபொருளை வழக்கம் போல் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நாட்டின் எரிபொருள் விநியோகச் சங்கிலி சீராக இருப்பதை உறுதி செய்ய தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *