எரிபொருள் தட்டுப்பாடு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களிடம் வேண்டுகோள்

எரிபொருள் தட்டுப்பாடு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களிடம் வேண்டுகோள்

மேற்காசியப் போர்ச் சூழலால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்று நிலவும் அச்சத்தைப் போக்கும் வகையில், போதுமான அளவு பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு கையிருப்பில் உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் யாரும் தேவையற்ற பதற்றத்திற்கு உள்ளாக வேண்டாம் என்றும், நிலைமையைக் கையாள அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் அவர் உறுதி அளித்துள்ளார்.

எரிபொருள் விநியோகத்தை சீராக வைத்திருக்க பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். மேலும், உணவுத்துறை அமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு விநியோகம் கண்காணிக்கப்படுகிறது. மத்திய அரசின் முயற்சிகளுக்குத் துணை நின்று இந்தச் சூழலை எதிர்கொள்வோம் என அவர் தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *