‘எங்கள் IQ பாஜக ஊழியர்களைப் போல் இல்லை’ ECயின் வாதம் அபத்தமானது என மௌவா விமர்சனம்

‘எங்கள் IQ பாஜக ஊழியர்களைப் போல் இல்லை’ ECயின் வாதம் அபத்தமானது என மௌவா விமர்சனம்

‘வாக்குத் திருட்டு’ குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் (EC) அளித்த விளக்கத்தை ‘அபத்தமானது’ என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மௌவா மொய்த்ரா கடுமையாக விமர்சித்துள்ளார். தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறிய இரண்டு கருத்துக்களை அவர் கேள்விக்குள்ளாக்கி உள்ளார். சமூக ஊடகங்களில் வெளியிட்ட காணொலிச் செய்தியில், “ஐயா, எங்கள் IQ-வை பாஜக ஊழியர்களின் IQ-வைப் போல் நினைக்காதீர்கள்” என்று அவர் கூறினார்.

பீகார் மாநில வரைவு வாக்காளர் பட்டியலில் கிட்டத்தட்ட 22 லட்சம் இறந்த வாக்காளர்கள் எங்கிருந்து வந்தனர் என்று அவர் கேள்வி எழுப்பினார். ஏனெனில், சில மாதங்களுக்கு முன்புதான் வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக இறந்த வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தால், இவ்வளவு காலம் அவை ஏன் பட்டியலில் இருந்தன என்று அவர் மேலும் கேள்வி எழுப்பினார். இதற்கு தேர்தல் ஆணையமே பொறுப்பேற்க வேண்டும் என மௌவா மொய்த்ரா கூறியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *