ஊட்டி மலை ரயிலில் இனி கூடுதல் பயணம் மேட்டுப்பாளையம் சுற்றுலா பயணிகளுக்கு ரயில்வே வழங்கிய கோடைகால பரிசு
March 27, 2026

மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை கோடைகால சிறப்பு மலை ரயில் சேவை இன்று முதல் தொடங்கியுள்ளது. வரும் ஜூலை 5-ஆம் தேதி வரை வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற இந்த பாரம்பரிய ரயிலில் பயணித்து இயற்கை எழிலை ரசிக்க சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மறுமார்க்கமாக ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு நாளை முதல் ஜூலை 6-ஆம் தேதி வரை சனி மற்றும் திங்கட்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இன்று காலை 9:10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்ட ரயிலில் ஏராளமான பயணிகள் உற்சாகத்துடன் பயணித்தனர். இந்த கூடுதல் சேவை கோடை விடுமுறையை கழிக்க வரும் சுற்றுலா பயணிகளுக்கு பெரும் வசதியாக அமைந்துள்ளது.