உஸ்தாத் பகத்சிங் ட்ரைலரை கொண்டாடும் ரசிகர்கள் பவன் கல்யாணுக்கு சிரஞ்சீவி நெகிழ்ச்சி வாழ்த்து

நடிகரும் ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள ‘உஸ்தாத் பகத்சிங்’ படத்தின் ட்ரைலர் வெளியாகி இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. இந்த ட்ரைலரைப் பார்த்த மெகாஸ்டார் சிரஞ்சீவி, தனது எக்ஸ் தளத்தில் படக்குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அரசியல் ரீதியான கடந்த கால மாற்றுக் கருத்துகளைத் தாண்டி, சகோதரர் பவன் கல்யாணின் கலைப்பயணத்திற்கு அவர் அளித்துள்ள இந்த ஆதரவு ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் மார்ச் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஸ்ரீலீலா மற்றும் பார்த்திபன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே ‘ஓஜி’ திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த நிலையில், சிரஞ்சீவியின் இந்த வாழ்த்து ‘உஸ்தாத் பகத்சிங்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது.