உலர்ந்த திராட்சை பிடிக்குமா? அளவுகடந்து சாப்பிட்டால் வரும் ஆபத்துகள்!

பாயாசம் அல்லது சேமியா போன்ற இனிப்பு வகைகளில் உலர்ந்த திராட்சை (கிஸ்மிஸ்) இல்லாமல் சமைப்பதே இல்லை. திராட்சையை உலர்த்தி தயாரிக்கப்படும் இந்த உலர் பழத்தில் இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம், வைட்டமின்-பி மற்றும் நார்ச்சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மலச்சிக்கலை நீக்குதல், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது போன்ற பல ஆரோக்கிய நன்மைகளுக்காக கிஸ்மிஸ் உணவில் சேர்க்கப்படுகிறது.
எனினும், கிஸ்மிஸ் நன்மை பயக்கும் என்றாலும், அதை அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். கிஸ்மிஸில் அதிக கலோரிகள் மற்றும் இயற்கையான சர்க்கரை இருப்பதால், இதை அதிகமாகச் சாப்பிடுவது எடை அதிகரிப்பு அபாயத்தை அதிகரிக்கும். மேலும், இதில் உள்ள அதிக நார்ச்சத்து செரிமான பிரச்சனைகள், வாயு அல்லது வயிற்று உப்புசத்தை ஏற்படுத்தலாம். இதன் முழு பலனைப் பெற, கிஸ்மிஸை அளவோடு உண்ணுமாறு வல்லுநர்கள் அறிவுறுத்துகிறார்கள்.