உலகக்கோப்பை தகுதிச் சுற்று அரையிறுதியில் இன்று இத்தாலியுடன் மோதுகிறது இந்திய மகளிர் அணி

உலகக்கோப்பை தகுதிச் சுற்று அரையிறுதியில் இன்று இத்தாலியுடன் மோதுகிறது இந்திய மகளிர் அணி

ஹைதராபாத்தில் நடைபெறும் மகளிர் ஹாக்கி உலகக்கோப்பை தகுதிச் சுற்றில், இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இத்தாலி அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. ஏற்கனவே உலகக்கோப்பை வாய்ப்பை உறுதி செய்துள்ள இந்திய அணி, தற்போது தகுதிச் சுற்றின் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறது. 4 கோல்கள் அடித்து முதலிடத்தில் உள்ள நவ்னீத்கவுர் இன்றைய ஆட்டத்தில் இந்தியாவின் துருப்புச் சீட்டாக இருப்பார்.

மறுபுறம் இத்தாலி அணி தனது நட்சத்திர வீராங்கனை ஃபெடரிகா கார்டாவை பெரிதும் நம்பியுள்ளது. புள்ளிவிவரங்களின்படி, 2012 முதல் இரு அணிகளும் மோதிய 7 போட்டிகளில் இந்தியா 5 முறை வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. பலம் வாய்ந்த இந்திய அணி இத்தாலியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா என்பதை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *