உடைந்த கண்ணாடி 7 வருட துரதிர்ஷ்டத்தை கொண்டு வருமா? செல்வம் மற்றும் நல்லிணக்கத்திற்கான வாஸ்து குறிப்புகள்!

வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் கண்ணாடியின் சரியான இடம் நேர்மறை அல்லது எதிர்மறை சக்தியின் ஓட்டத்தை கணிசமாகப் பாதிக்கிறது. எனவே, அதிர்ஷ்டம், செழிப்பு மற்றும் நேர்மறை ஆற்றலைப் பெற, கண்ணாடிகளை வடக்கு அல்லது கிழக்கு திசையை நோக்கிய சுவர்களில் வைப்பது சிறந்தது. அதேபோல், பணியிடத்தில், வடகிழக்கு, வடக்கு அல்லது கிழக்கில் கண்ணாடியை வைப்பது தொழில் தடைகளை நீக்கி, பணியை எளிதாக்க உதவும். தவறான திசையில் கண்ணாடி வைப்பது பணத்தட்டுப்பாடு மற்றும் குடும்ப சண்டைக்கு வழிவகுக்கும் என நம்பப்படுகிறது.
இருப்பினும், சில இடங்களில் கண்ணாடியை வைப்பதைத் தவிர்க்க வேண்டும். தெற்கு, மேற்கு அல்லது ஆக்னேய மூலையில் (தென்கிழக்கு) கண்ணாடிகளை வைப்பதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது நிதி இழப்பை ஏற்படுத்தும். மேலும், இரண்டு கண்ணாடிகளை நேருக்கு நேராக வைப்பதைத் தவிர்க்கவும், படிக்கட்டுகளுக்கு அருகில் அல்லது குழந்தைகளின் அறைகளில் மேற்குச் சுவரில் வைக்க வேண்டாம். மிக முக்கியமாக, உடைந்த, கூர்மையான அல்லது ஓரங்களில் பிளவுள்ள கண்ணாடியை உடனடியாக வீட்டில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். ஏனெனில் இது எதிர்மறை சக்தியை ஈர்த்து, அகற்றப்படாவிட்டால் 7 வருடங்கள் துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.