உடற்பயிற்சி செய்கிறீர்களா? இந்த தவறு செய்தால் மரணம் கூட சம்பவிக்கலாம்: நிபுணர்கள் எச்சரிக்கை!
February 10, 2026

செய்திப்பிரிவு: தசைகளை விரைவாக வளர்க்க வேண்டும் என்ற அவசரத்தில் நீங்கள் ‘வார்ம்-அப்’ (Warm-up) பயிற்சியை தவிர்க்கிறீர்களா? இந்த அலட்சியம் வெறும் தசைப்பிடிப்போடு முடிந்துவிடாது; இது மாரடைப்பு வரை கொண்டு செல்லக்கூடும் என உடற்பயிற்சி நிபுணர்கள் கடுமையாக எச்சரிக்கின்றனர்.
வெறுமனே ட்ரெட்மில்லில் நடப்பதோ அல்லது கை கால்களை அசைப்பதோ போதுமான வார்ம்-அப் ஆகாது. குறிப்பாக அதிக எடைகளை தூக்கும் போது (Heavy weight lifting), குறிப்பிட்ட தசைகளை தயார்படுத்தாவிட்டால் விபரீதங்கள் ஏற்படுவது 100 சதவீதம் உறுதி.
நிபுணர்களின் முக்கிய அறிவுரைகள்:
- படிப்படியான பயிற்சி: நேரடியாக 80 கிலோ எடையை தூக்காமல், முதலில் 10 கிலோவில் தொடங்கி உடலை தயார்படுத்த வேண்டும்.
- இரத்த ஓட்டம்: தசைகளுக்கு சீரான இரத்த ஓட்டத்தை உறுதி செய்த பின்னரே கடினமான பயிற்சிகளில் இறங்க வேண்டும்.
- நரம்பு மண்டல ஒருங்கிணைப்பு: நரம்புகளுக்கும் தசைகளுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு இல்லாமல் திடீரென உடற்பயிற்சி செய்வது பக்கவாதம் அல்லது நிரந்தர ஊனத்திற்கு வழிவகுக்கலாம்.
சரியான முறையில் வார்ம்-அப் செய்யாமல் உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியத்திற்கு பதிலாக ஆபத்தையே விரைவாக தேடித்தரும்.