உங்கள் பர்ஸில் இருக்கும் இந்த பொருட்கள் பணத்தடையை உண்டாக்கும் வாஸ்து சாஸ்திரம் கூறும் ரகசியங்கள்

வாஸ்து சாஸ்திரத்தின்படி பர்ஸில் பணம் மட்டுமே இருக்க வேண்டும். மற்ற தேவையற்ற பொருட்கள் எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும். பலர் பர்ஸில் சாவி அல்லது உலோகப் பொருட்களை வைக்கும் பழக்கம் கொண்டவர்கள், இது தேவையற்ற செலவுகளை அதிகப்படுத்தும். அதேபோல் மின்சார பில் அல்லது பழைய ரசீதுகளை பர்ஸில் வைப்பது பண இழப்பை ஏற்படுத்தும். கிழிந்த பர்ஸைப் பயன்படுத்துவது மற்றும் பணத்தை மடித்து அல்லது சுருட்டி வைப்பது லட்சுமி கடாட்சத்தைக் குறைக்கும் என நம்பப்படுகிறது.
பண வரவு அதிகரிக்க பர்ஸில் ஒரு சிட்டிகை அரிசி அல்லது லட்சுமி தேவியின் சிறிய படத்தை வைப்பது நல்லது. ஒரு சிவப்பு காகிதத்தில் உங்கள் விருப்பத்தை எழுதி பட்டு நூலால் கட்டி பர்ஸில் வைப்பதன் மூலம் நினைத்தது நிறைவேறும். முன்னோர்களின் படங்களை பர்ஸில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். கடன் வாங்கிய பணத்தை பர்ஸில் வைக்காமல் தனியாக வைப்பதன் மூலம் நிதி நெருக்கடிகளில் இருந்து தப்பிக்கலாம் மற்றும் செல்வத்தைச் சேமிக்கலாம்.