ஈரான் மோதல் எதிரொலியால் துபாயை விட்டு வெளியேறும் ஆயிரக்கணக்கான கோடீஸ்வரர்கள்

ஈரான் மோதல் எதிரொலியால் துபாயை விட்டு வெளியேறும் ஆயிரக்கணக்கான கோடீஸ்வரர்கள்

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே அதிகரித்து வரும் பதற்றம் காரணமாக துபாயில் வசிக்கும் பெரும் செல்வந்தர்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். பாதுகாப்பு கருதி சுமார் ஆயிரம் குடும்பங்கள் ஓமானின் மஸ்கட் வழியாக இஸ்தான்புல் மற்றும் கெய்ரோவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். தனியார் ஜெட் விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் மஸ்கட் விமான நிலையம் தற்போது வணிக ரீதியான விமானங்களுக்கு முன்னுரிமை அளித்துள்ளது.

தற்போது வான்வெளி எல்லைகள் குறைக்கப்பட்டுள்ளதால் விமானங்கள் ராணுவ பாதுகாப்பின் கீழ் இயக்கப்படுகின்றன. கடுமையான தட்டுப்பாடு காரணமாக தனியார் விமான டிக்கெட் ஒன்றின் விலை 20 ஆயிரம் டாலரை தாண்டியுள்ளது. பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் சாதாரண பயணிகள் தவிக்கும் நிலையில் ஏர் இந்தியா போன்ற நிறுவனங்கள் கூடுதல் விமான சேவைகளை அறிவித்துள்ளன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *