ஈரான் மீதான தாக்குதலை திடீரென நிறுத்திய டிரம்ப் பின்னணியில் இருக்கும் ரகசியம் என்ன

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் நான்காவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்த பத்து நாட்களுக்கு போர் நிறுத்தப்படுவதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ஈரான் அரசின் கோரிக்கையை ஏற்று ஏப்ரல் 6-ஆம் தேதி வரை எரிசக்தி நிலையங்கள் மீதான நடவடிக்கை ஒத்திவைக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். அமைதி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட டிரம்ப், இது தொடர்பான தவறான தகவல்களை நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.
அமெரிக்கா விதித்துள்ள 15 நிபந்தனைகளை ஈரான் ஏற்றால் மட்டுமே பொருளாதாரத் தடைகள் நீக்கப்படும் என வாஷிங்டன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. குறிப்பாக அணுசக்தி கைவிடப்பட வேண்டும் மற்றும் ஆயுத உதவிகள் நிறுத்தப்பட வேண்டும் என்பது பிரதான கோரிக்கையாக உள்ளது. எனினும், டாலரின் ஆதிக்கத்தைத் தக்கவைக்கவே அமெரிக்கா இத்தகைய கடினமான நிபந்தனைகளை விதிப்பதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.