ஈரான் பள்ளி மாணவிகள் பலி விவகாரத்தில் டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக வெடித்த கடும் கண்டனம்

ஈரான் பள்ளி மாணவிகள் பலி விவகாரத்தில் டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக வெடித்த கடும் கண்டனம்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் சிறுமிகள் பள்ளியைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவிகள் உயிரிழந்தது உலகையே அதிரவைத்துள்ளது. இந்த கொடூரத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ‘தெஹ்ரான் டைம்ஸ்’ பத்திரிகை மாணவிகளின் புகைப்படங்களை வெளியிட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்பை கடுமையாக விமர்சித்துள்ளது. ட்ரம்பின் போர்வெறி மற்றும் ராஜதந்திரமற்ற போக்கினை சாடியுள்ள அந்த இதழ், உயிரிழந்த குழந்தைகளின் கண்களை நேருக்கு நேர் பார்க்குமாறு அவருக்கு சவால் விடுத்துள்ளது.

இந்த தாக்குதலால் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. இதனை தொழில்நுட்ப கோளாறு என ட்ரம்ப் கூறினாலும், அமெரிக்காவின் தலையீடு இதில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் பதிலடி தாக்குதல்களால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளதுடன், பலி எண்ணிக்கை 2,000-ஐ கடந்துள்ளது. இந்த தொடர் மோதல்கள் உலக பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என சர்வதேச சமூகம் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *