ஈரான் தலைவர்கள் கொல்லப்பட்டும் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகளை திணறடிக்கும் மொசைக் பாதுகாப்பு தந்திரம்
March 13, 2026

ஈரானின் உயர்மட்ட தலைவர்கள் மற்றும் ராணுவ தளபதிகள் அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டாலும், ஈரானின் பாதுகாப்பு அரண் இன்னும் உடையவில்லை. மேஜர் ஜெனரல் முகமது அலி ஜாஃபரி உருவாக்கிய ‘பரவலாக்கப்பட்ட மொசைக் பாதுகாப்பு’ முறையே இந்த வலுவான எதிர்ப்பிற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
இந்த உத்தியின்படி, தலைமை இல்லாத நிலையிலும் ஒவ்வொரு படைப்பிரிவும் தனித்துச் செயல்பட்டு தாக்குதல் நடத்த முடியும். ஈரானிய ஆட்சிமுறை வீழ்ச்சியடையாமல் இருப்பதற்கும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தொடர்ந்து பதிலடி கொடுப்பதற்கும் ஜாஃபரியின் இந்த தொலைநோக்கு ராணுவத் திட்டமே அடிப்படையாகும்.