ஈரானிய கண்காணிப்பை ஏமாற்றி கச்சா எண்ணெயுடன் இந்தியா வந்தடைந்தது ஷென்லாங் கப்பல்

ஈரானிய கண்காணிப்பை ஏமாற்றி கச்சா எண்ணெயுடன் இந்தியா வந்தடைந்தது ஷென்லாங் கப்பல்

மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவும் சூழலில், ஈரானின் தடைகளைத் தாண்டி ‘ஷென்லாங் சூயஸ்மேக்ஸ்’ கப்பல் பாதுகாப்பாக இந்தியா வந்தடைந்தது. சுமார் 1.35 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெயுடன் வந்த இந்த கப்பல், ஈரானிய படைகளின் டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் அச்சுறுத்தல்களையும் வெற்றிகரமாக முறியடித்துள்ளது.

ஈரானிய ரேடார் மற்றும் டிரோன் கண்காணிப்பில் இருந்து தப்பிக்க, இக்கப்பல் தனது ‘ஏஐஎஸ்’ (AIS) கருவியை அணைத்துவிட்டு ‘நிழல் பயணம்’ மேற்கொண்டது. சவூதி அரேபியாவிலிருந்து புறப்பட்ட இந்த கப்பலின் வருகையினால், இந்தியாவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் தற்காலிகமாக தவிர்க்கப்பட்டுள்ளதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *