இரவில் தவறான நிலையில் தூங்குவது உங்கள் இதயம் மற்றும் கல்லீரலை பாதிக்கிறதா

நமது உடலின் ஆரோக்கியத்திற்கு தூக்கத்தின் நிலையை சரியாக பராமரிப்பது மிகவும் அவசியம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இடது பக்கம் சரிந்து தூங்குவது உடலின் செரிமான மண்டலத்தை மேம்படுத்த உதவுகிறது. இரைப்பை உடலின் இடது பகுதியில் இருப்பதால், இந்த நிலையில் தூங்கும் போது ஈர்ப்பு விசையினால் உணவு எளிதில் செரிமானமாகிறது. மேலும், இது உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றும் நிணநீர் மண்டலத்தின் செயல்பாட்டை துரிதப்படுத்தி ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
இதய ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இடது பக்கம் சரிந்து தூங்குவது இரத்த ஓட்டத்தை சீராக்கி இதயத்தின் மீதான அழுத்தத்தைக் குறைக்கிறது. முதுகு வலி மற்றும் குறட்டை விடும் பிரச்சனை உள்ளவர்களுக்கும் இந்த உறக்க நிலை ஒரு சிறந்த தீர்வாகும். இது முதுகெலும்பிற்கு ஓய்வு அளிப்பதுடன் சுவாசப் பாதையை சீராக வைத்து குறட்டையைக் குறைக்கிறது. எனவே, கல்லீரல் மற்றும் இதயத்தைப் பாதுகாத்து நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ சரியான உறக்க நிலையை பின்பற்றுவது அவசியமாகும்.