இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் எடுத்த விபரீத முடிவு

இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் எடுத்த விபரீத முடிவு

காஞ்சிபுரம் மாவட்டம் மாடம்பாக்கத்தில் இரண்டு குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 26 வயதான ஷாம்ஷியா, தனது 10 மற்றும் 5 வயது சிறுவர்களுடன் விவசாய கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். மணிமங்கலம் போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கணவரின் மறைவிற்குப் பிறகு ஏற்பட்ட கடன் தொல்லையே இந்த முடிவுக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஷாம்ஷியா எழுதிய கடிதத்தையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். இந்த உயிரிழப்புகளுக்கு பின்னணியில் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *