இந்தியாவின் முதல் புகலிடத் துறைமுகத்தை உருவாக்கி அதானி போர்ட்ஸ் வரலாற்று சாதனை
March 28, 2026

இந்திய கடல்சார் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் அதானி போர்ட்ஸ் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டல நிறுவனம் நாட்டின் முதல் ‘புகலிடத் துறைமுகத்தை’ (Port of Refuge) அமைத்துள்ளது. இது இந்திய கடல்சார் துறையில் ஒரு முக்கிய மைல்கல் என்று அந்த நிறுவனத்தின் இயக்குனர் அஸ்வினி குப்தா பெருமையுடன் தெரிவித்துள்ளார்.
ஒரு முத்தரப்பு ஒத்துழைப்பின் கீழ் அதானி குழுமம் இந்த சிறப்பு துறைமுகத்தை உருவாக்கி வருகிறது. அவசர காலங்களில் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், இந்தியாவின் கடல்சார் பாதுகாப்புத் திறனை மேம்படுத்தவும் இந்த புதிய உள்கட்டமைப்பு பெரும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.