இந்தி திரைப்பட இயக்குநர் ரோனோ முகர்ஜி காலமானார்

பிரபல இந்தி திரைப்பட இயக்குநரான ரோனோ முகர்ஜி (வயது 83) இன்று மும்பையில் காலமானார். கடந்த சில மாதங்களாக வயது சார்ந்த உடல் நிலை குறைவுகளால் அவதிப்பட்டு வந்த அவர், பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் உடல்நிலை மேலும் மோசமாகி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் நேற்று உயிரிழந்தார். அவரது மரணச் செய்தி திரை உலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரோனோ முகர்ஜி, 1965ல் வெளியான Tu Hi Meri Zindagi மற்றும் 1977ல் வெளியான Haiwan போன்ற வெற்றி படங்களை இயக்கியவர். இவரது படங்கள் அதன் காலத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், ரசிகர்களிடம் தனிச்சிறப்பு பெற்றவை. இவர் பிரபல இந்தி நடிகை சர்பானி முகர்ஜியின் தந்தையும் ஆவார். அவரது மறைவுக்கு திரையுலகின் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது பங்களிப்பு இந்தி சினிமாவில் என்றும் நினைவுகூரப்படும்.