இத்தாலியில் அதிசயம் ஒரே நாளில் தாயும் மகளும் பிரசவித்த அபூர்வ நிகழ்வு வியப்பில் மருத்துவர்கள்

இத்தாலியில் அதிசயம் ஒரே நாளில் தாயும் மகளும் பிரசவித்த அபூர்வ நிகழ்வு வியப்பில் மருத்துவர்கள்

இத்தாலியின் நேப்பில்ஸ் நகரில் உள்ள கார்டரெல்லி மருத்துவமனையில் இயற்கையின் ஒரு அபூர்வ அதிசயம் நிகழ்ந்துள்ளது. 35 வயதான மாரா பரோன் மற்றும் அவரது 21 வயது மகள் பாவோலா ஆகிய இருவரும் ஒரே நாளில் ஆண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர். சில மணிநேர இடைவெளியில் நடந்த இந்த பிரசவங்களின் மூலம் மாரா ஒரே நாளில் தாயாகவும் பாட்டியாகவும் மாறியுள்ளார். கர்ப்பகாலம் முழுவதும் இந்த தாயும் மகளும் ஒரே வீட்டில் ஒன்றாகவே இருந்துள்ளனர்.

மருத்துவமனை இயக்குனர் கிளாடியோ சந்தாஞ்சலோ இந்த நிகழ்வை ஒரு அதிசயம் என்று வர்ணித்துள்ளார். தாய் மற்றும் மகள் இருவருக்கும் எவ்வித சிக்கலுமின்றி சுகப்பிரசவம் நடந்துள்ளதோடு, குழந்தைகளும் தாய்களும் நலமுடன் உள்ளனர். இந்த அரிய நிகழ்வின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், ஒரே நேரத்தில் இரண்டு புதிய வரவுகளைப் பெற்ற அந்த குடும்பத்திற்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *