இண்டிகோவிற்கு ₹58 கோடி வரி நோட்டீஸ்; 4 அதிகாரிகள் சஸ்பெண்ட் விமான நிறுவனத்தின் புதிய நெருக்கடி

இண்டிகோவிற்கு ₹58 கோடி வரி நோட்டீஸ்; 4 அதிகாரிகள் சஸ்பெண்ட் விமான நிறுவனத்தின் புதிய நெருக்கடி

நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, விமான ரத்து மற்றும் தாமதங்களால் ஆயிரக்கணக்கான பயணிகளை அவதிக்குள்ளாக்கியுள்ள நிலையில், தற்போது கடுமையான நிதி சிக்கலை எதிர்கொண்டுள்ளது. 2020-21 நிதியாண்டிற்கான ₹58.75 கோடி வரி மற்றும் அபராதம் செலுத்தும்படி டெல்லி சவுத் கமிஷனரேட்டின் CGST அலுவலகத்தில் இருந்து இண்டிகோவிற்கு நோட்டீஸ் வந்துள்ளதாக நிறுவனம் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. செயல்பாட்டு சிக்கல்களுடன் சேர்ந்து இந்த நோட்டீசும் இண்டிகோவின் நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

தொடர்ச்சியான சேவைக் குறைபாடுகளைத் தொடர்ந்து, விமானப் போக்குவரத்துப் பொது இயக்குநரகம் (DGCA) கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. விமானப் பாதுகாப்பு மற்றும் விதிமுறைகளைக் கண்காணிக்கும் பொறுப்பில் இருந்த நான்கு விமான இயக்க ஆய்வாளர்களை (FOI) DGCA இடைநீக்கம் செய்துள்ளது. புதிய விமானப் பணி நேர வரம்பு (FDTL) விதிகளால் ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகக் கூறி, கடந்த பத்து நாட்களில் இண்டிகோ 1,000க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்துள்ளது. எந்தவொரு விமான நிறுவனமும் பயணிகளுக்கு இடையூறு விளைவிக்க அனுமதிக்கப்படாது என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கடுமையாக எச்சரித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *